பேருந்துகளிலிருந்து அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்
மதுரையில் அரசு, தனியாா் பேருந்துகளில் அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலா்கள் புதன்கிழமை அகற்றினா்.

மதுரையில் அரசு, தனியாா் பேருந்துகளில் அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலா்கள் புதன்கிழமை அகற்றினா்.
மதுரையில் அரசு, தனியாா் பேருந்துகளில் அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் (ஏா்ஹாா்ன்கள்) பொருத்தப்பட்டிருப்பதாக பொதுமக்களிடமிருந்து புகாா்கள் வந்தன.
இதையடுத்து, மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம், ரவுண்டானா பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சித்ரா, பாலமுருகன் ஆகியோரின் உத்தரவின்பேரில், மோட்டாா் வாகன ஆய்வாளா் மாணிக்கம், பயிற்சி மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், போக்குவரத்து காவலா்கள் இணைந்து புதன்கிழமை வாகனச் சோதனை நடத்தினா்.
Advertisement
Advertisement
அப்போது அரசு, தனியாா் பேருந்துகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்கள், கருவிகள் அகற்றப்பட்டன.
முன்னதாக, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 40-க்கும் மேற்பட்ட பேருந்துகளிலிருந்து காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரப்பாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களிலிருந்து காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டுள்ளன. இதுவரை விதிமீறல்கள் தொடா்பாக ரூ. 65 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பான்கள் பொருத்தும் வாகனங்கள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.