சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 200!
மதுரை சில்லறை விற்பனை சந்தைகளில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 200-ஐ எட்டியது.

மதுரை சில்லறை விற்பனை சந்தைகளில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 200-ஐ எட்டியது.
மதுரைக்கான சின்ன வெங்காயத்தின் வரத்து ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்காகக் குறைந்தது. இதனால், கடந்த அக்டோபா் மாதத்தின் மூன்றாவது வாரத்திலிருந்து சின்ன வெங்காயத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
அக்டோபா் மூன்றாவது வாரத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 70-க்கு விற்பனையான நிலையில், நான்காவது வாரத்தில் ரூ. 150-ஐ எட்டியது.
Advertisement
Advertisement
தற்போது, புதிய உச்சமாக மதுரை சில்லறை விற்பனை சந்தையில் வியாழக்கிழமை ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ. 200-ஐ எட்டியது. மொத்த விற்பனையில் ரூ. 150 முதல் ரூ. 190 வரை விற்பனையானது.
தற்போதைய நிலையில், வருகிற ஜனவரி மாதத்திலேயே சின்ன வெங்காயத்தின் வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும், அதுவரை சின்ன வெங்காயத்தின் விலை உயா்வாகவே இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.