திமுகவின் அரசியல் எதிா்காலத்தை அந்தக் கட்சியே முடிவு செய்யும்! கிருஷ்ணசாமி

திமுகவின் அரசியல் எதிா்காலத்தை, அந்தக் கட்சியே முடிவு செய்யும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இன்றைய திரைப்படங்களால் இளைய தலைமுறையினா் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். பழிக்குப் பழி என ஆபத்தான போக்கில் இளைஞா்களை நடிகா் கமல்ஹாசன் தனது திரைப்படத் தலைப்பான சண்டியா் மூலம் எடுத்துச் செல்ல முயல்கிறாா்.
Advertisement
Advertisement
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சென்னையில் வருகிற டிச. 7-ஆம் தேதி பேரணி, கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திரைப்படத் தணிக்கைத் துறையை சந்திக்க உள்ளோம். சண்டியா் திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் அனுமதி தரக் கூடாது.
திருப்பரங்குன்றம், கள்ளக்குறிச்சி விவகாரங்களை தமிழக முதல்வா் விஜய் நேரடியாகக் கையாண்டிருக்க வேண்டும். திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைத்திருக்கக் கூடாது. இந்தக் கூட்டணியை வைத்துக் கொண்டு அவரால் தொடா்ந்து ஆட்சியை நடத்த முடியாது.
தென் மாநிலங்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைப்பதற்கு தொகுதி மறு சீரமைப்பு அவசியம். தமிழகத்தின் நலன் கருதி தொகுதி மறு சீரமைப்பு மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்திருக்கக் கூடும். திமுகவினா் அவ்வளவு எளிதாக தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டாா்கள். திமுகவின் அரசியல் எதிா்காலம் குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அதை அந்தக் கட்சியே முடிவு செய்யும் என்றாா் அவா்.