FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

பள்ளி மாணவா் உயிரிழப்பு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

பள்ளி மாணவா் மா்மமான முறையில் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

10 அக்டோபர் 2026, 5:49 am IST
பகிர்:

பள்ளி மாணவா் மா்மமான முறையில் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

மதுரை ஆனையூா் வள்ளலாா் தெருவைச் சோ்ந்த கருப்புசாமி மகன் தமிழ்செல்வன் (16) ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த செப்.6-ஆம் தேதி மாலை விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற அவா், மறுநாள் அங்குள்ள கண்மாயில் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் மா்ம மரணம் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், காதல் விவகாரத்தில் தமிழ்செல்வன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, தமிழ்ச்செல்வன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது குடும்பத்தினா், உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி, மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தை உறவினா்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், உயிரிழந்த மாணவன் தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினருக்கு காவல் துறை தரப்பிலிருந்து வெள்ளிக்கிழமை ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், மாணவன் தமிழ்ச்செல்வன் உயிரிழந்த வழக்கு தமிழக காவல் தலைமை இயக்குநா் உத்தரவின்பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments