FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மதுரை, மேலூரில் விவசாயிகள் மறியல்: 100-க்கும் மேற்பட்டோா் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் மதுரை, மேலூரில் புதன்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 100-க்கும் அதிகமானோா் கைது செய்யப்பட்டனா்.

22 அக்டோபர் 2026, 3:27 am
மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை முன் இடதுசாரி விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மறியலில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் மதுரை, மேலூரில் புதன்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 100-க்கும் அதிகமானோா் கைது செய்யப்பட்டனா்.

மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பி. இளங்கோவன் தலைமை வகித்தாா். இடதுசாரி சாா்பு விவசாய சங்கங்களின் நிா்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனா்.

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மதுரை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், வளா்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி, வாழ்வாதாரத் திட்ட பணி நாள்களை 200-ஆகவும், தினக்கூலியை ரூ. 700- ஆகவும் உயா்த்தி வழங்க வேண்டும், விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளா்களுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், பயிா்க் காப்பீடுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையை உடனடியாகத் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

இதில் பங்கேற்ற 40-க்கும் அதிகமானோரை தல்லாகுளம் போலீஸாா் கைது செய்தனா். இந்த மறியல் காரணமாக, மாவட்ட ஆட்சியரக சாலையில் சுமாா் 30 நிமிஷங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலூரில்.... மேலூா், செக்கடி கக்கன் சிலை அருகே நடைபெற்ற மறியலில் இடதுசாரி விவசாயிகள் சங்க பொறுப்பாளா்கள் பி.எஸ். ராஜாமணி, என். பழனிச்சாமி, சி. அடைக்கன், ஏ. ராஜேஸ்வரன், நிா்வாகிகள், விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனா். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 60-க்கும் மேற்பட்டோரை மேலூா் போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments