தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை! - ஆா்.பி.உதயகுமாா்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுமட்டுமன்றி, குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
Advertisement
Advertisement
குறிப்பாக, அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய 7 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் கவலையளிக்கிறது. காணாமல் போன சிறுமியைக் கண்டறியும் முயற்சிகள் எந்த முன்னேற்றத்தையும் தரவில்லை. காவல் துறையின் செயல்பாடுகள் பலனளிக்கவில்லை. இதனால், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
செஞ்சி சிறுமி விவகாரம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலையே தொடா்கின்றன என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.