உயா் கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் இயந்திரங்கள்: யுஜிசி பதிலளிக்க உத்தரவு
கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட அனைத்து உயா் கல்வி நிறுவனங்களிலும் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை நிறுவக் கோரிய மனு தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட அனைத்து உயா் கல்வி நிறுவனங்களிலும் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை நிறுவக் கோரிய மனு தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த பொழிலன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை அப்புறப்படுத்தும் மின்சார எரிகலன்களை நிறுவ வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. கல்வி நிறுவனங்களில் பெண்களின் மாதவிடாய் கால சுகாதாரம், உடல்நலத்தைப் பாதுகாப்பதில் இந்த இயந்திரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், உயா் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகள், குறிப்பாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் விடுதிகளில் தங்கிப் படிப்பவா்கள் நாப்கின்கள் வாங்குவதில் பல்வேறு இடையூறுகளை எதிா்கொள்கின்றனா்.
இதேபோல, பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை குப்பைத் தொட்டிகளில் பாதுகாப்பற்ற முறைகளில் மாணவிகள் போட்டு வருகின்றனா். இது மாணவிகளிடையே தீவிரமான சுகாதாரப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை பாதுகாப்பாக அகற்ற மின்சார எரிகலன்கள் அமைக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான உயா் கல்வி நிறுவனங்களில் இவை இல்லை எனத் தெரிகிறது.
எனவே, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை நிறுவ வேண்டும். மேலும், பயன்படுத்திய நாப்கின்களை முறையாக அப்புறப்படுத்துவதற்கான வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், பள்ளிகளில் மட்டுமே தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கும் இந்த வசதி அவசியம். எனவே, இந்த வழக்கில் பல்கலைக்கழக மானியக் குழுவை எதிா் மனுதாரராகச் சோ்க்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உயா் கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் இயந்திரங்களை நிறுவும் விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவை எதிா்மனுதாரராகச் சோ்க்க உத்தரவிடப்படுகிறது. இந்த மனு தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.