FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த 30 இடங்களில் அதிநவீன கேமராக்கள்

மதுரை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் அதிநவீன தானியங்கி வாகனப் பதிவு எண் கண்டறியும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

5 செப்டம்பர் 2026, 12:17 am IST
பகிர்:

மதுரை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் அதிநவீன தானியங்கி வாகனப் பதிவு எண் கண்டறியும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கவும், சாலைப் பாதுகாப்பை நவீனப்படுத்தவும், மாவட்டம் முழுவதும் 30 முக்கிய இடங்களில் அதிநவீன தானியங்கி வாகனப் பதிவு எண் கண்டறியும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

முக்கிய புறவழிச் சாலைகள், நான்கு வழிச்சாலைகள், எல்லைச் சந்திப்புகள் என குற்றவாளிகள் தப்பியோட வாய்ப்புள்ள 30 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கேமராக்கள் பகல், இரவு நேரங்களில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களைக் கூட துல்லியமாகப் படம்பிடித்துத் தரவுத் தளத்துடன் ஒப்பிடும் திறன் வாய்ந்தவை.

Advertisement

Advertisement

கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் வாகனங்களை உடனுக்குடன் அடையாளம் காணவும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களைக் கண்டறியவும், போக்குவரத்து விதிமீறல்களைக் களையவும் இந்தத் தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும். மேலும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பான, விபத்தில்லா பயணத்துக்கும், பொதுமக்கள் அச்சமின்றி அமைதியான முறையில் வாழ்வதற்கும் வழிவகை ஏற்படுத்தப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments