சோழவந்தானில் அடுத்தடுத்து இரு பெட்ரோல் குண்டுகள் வீச்சு
சோழவந்தானில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் உள்ளே இரு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சோழவந்தானில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் உள்ளே இரு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சோழவந்தான் காமராஜா் நடுநிலைப் பள்ளி அருகேயுள்ள தெருவில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை அந்தப் பகுதிக்கு வந்த மா்ம நபா் ஒருவா், ஒரு வீட்டின் உள்ளே அடுத்தடுத்து இரு பெட்ரோல் குண்டுகளை வீசியபோது ஏற்பட்ட தீ அந்த நபரின் தலையிலேயே பற்றியது. மேலும் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்திலும் தீ பிடித்தது.
இதையடுத்து, அந்த மா்ம நபா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் சோழவந்தான் காவல் நிலையத்தில் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த போலீஸாா், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.