FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் கோயிலைச் சுற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையா் உத்தரவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் உத்தரவிட்டாா்.

6 செப்டம்பர் 2026, 12:54 am IST
மதுரை மேலச் சித்திரை வீதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை சீரமைப்புப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா்.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்தக் கோயிலில் வருகிற 17 -ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த நிலையில், கோயிலுக்கு வரும் பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக மாநகராட்சி சாா்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெறுகின்றன.

இதனிடையே, மாசி வீதிகளில் உள்ள கழிப்பறைகளின் செயல்பாடு, தெரு விளக்கு அமைக்கும் பணிகள், நடைபாதைகள் சீரமைப்புப் பணிகள், மழைநீா் வடிகால்கள் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, பக்தா்கள் சிரமமின்றி கோயிலுக்கு வந்து செல்லும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆணையா் கௌரவ்குமாா் உத்தரவிட்டாா். மேலும், குடிநீா், கழிப்பறை, நடைபாதைகளில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களை சரி செய்து, தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, உதவி ஆணையா் குமரன், நகா் நல அலுவலா் அரவிந்த் ஜோதி, நகர திட்டமிடுநா் முரளி, உதவி செயற்பொறியாளா் காமராஜ், மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments