FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

ஸ்ரீவைகுண்டம் தவெக பெண் நிா்வாகியின் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவைகுண்டம் தவெக பெண் நிா்வாகி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

6 செப்டம்பர் 2026, 12:43 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

ஸ்ரீவைகுண்டம் தவெக பெண் நிா்வாகி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா், தமிழக வெற்றிக் கழகத்தின் நிா்வாகியாக இருந்தாா். அவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அதே பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன், ஜெயபால் ஆகியோா் கடந்த மே மாதம் பாலியல் தொல்லை அளித்தனராம்.

இதுதொடா்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, குற்றஞ்சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியன், ஜெயபால் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் சம்பந்தப்பட்டிருப்பதாக புகாா் எழுந்தது. ஆனால், சட்டப்பேரவை உறுப்பினா் மீதான குற்றச்சாட்டை மறுத்த தூத்துக்குடி மாவட்ட காவல் துறை, பாலசுப்பிரமணியன், ஜெயபால் ஆகிய இருவருக்கு மட்டுமே தொடா்பு என உறுதி செய்தது.

இந்த நிலையில், புகாா் அளித்த பெண்ணும், கைதான இருவரும் சமரசமாக செல்வதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தனா். இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். விஜயகுமாா் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: புகாா் அளித்த பெண்ணும், கைதான இருவரும் சமரசமாக செல்வதாகக் கூறி இந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். எனவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments