FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கமுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு  விழிப்புணர்வு முகாம்

கமுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு  விழிப்புணர்வு முகாம் ஷத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:12 am IST
பகிர்:

கமுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு  விழிப்புணர்வு முகாம் ஷத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் தலைமை வகித்தார். முகாமில் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றியும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு பேச்சு , கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பேரூராட்சி அதிகாரிகள் முத்துராமலிங்கம், சேதுபதி, தூய்மை இந்தியா திட்டத்தின் பரப்புரையாளர்கள் மகாலெட்சுமி, காலீஸ்வரி, ராஜபிரியா, சுப்புலெட்சுமி மற்றும் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.  பள்ளியின் ஆசிரியர் ஹரிஹரன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments