கமுதியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பெருமாள் கோயில் திடலில் விவசாய சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பெருமாள் கோயில் திடலில் விவசாய சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலர் கே.மாரிமுத்து தலைமை வகித்தார். மாநில துணை செயலர் எம்.சின்னதுரை, மாவட்ட செயலர் கே.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நூறு நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்துதல், அதை 200 நாள்களாக விரிவுபடுத்துதல், சிங்கப்புலியாபட்டி, வெள்ளயாபுரம் பகுதியில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு பட்டா வழங்குதல், வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டு மனை வழங்கிடுதல், சிறு, குறு விவசாயிகளுக்கு உள்ள நல வாரிய திட்டத்தை முடக்காமல் செயல்படுத்துதல், சிங்கப்புலியாபட்டி ஊருணியில் உள்ள கழிவுநீரை அப்புறப்படுத்தி மராமத்து செய்தல், 13 ஆவது வார்டில் ஊர்காவலன் கோயில் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியைச் சீரமைத்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. சிஐடியூ முறைசாரா மாவட்ட செயலர் ரா.முத்துவிஜயன் வரவேற்றார். இதில் தாலுகா குழு உறுப்பினர்கள், விவசாய சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.