திருவாடானையில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாடானை நான்கு வீதி சந்திப்பு ஓரியூர் முக்கு சாலையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவாடானை நான்கு வீதி சந்திப்பு ஓரியூர் முக்கு சாலையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு தாலுகா தலைவர் அருள்சாமி தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் பால்ராஜ், ரெத்தினம், பால்ச்சாமி, சகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 100 நாள் வேலை திட்டத்தை தனிச்சையாக முடக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், 100 நாள் வேலை நாள்களை 200 நாள்களாக உயர்த்தி அறிவிக்கக் கோரியும், இதற்கான சம்பளம் ரூ.205லிருந்து ரூ.400 ஆக உயர்த்தி வழங்கிட வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில துணை தலைவர் முத்து ராமு, மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தாலுகா குழு உறுப்பினர்கள் துரைசிங்கம், செபஸ்தியான்,சிவகாமி, வசந்தகுமார், அன்பின்ராஜா, மனோகரன், மகாலிங்கம் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.