மணல் கடத்தலை தடுத்த வனத்துறை ஊழியரை கொல்ல முயற்சி: இருவர் மீது வழக்கு
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே செவ்வாய்க்கிழமை இரவு மணல் கடத்தலில் ஈடுபட்டதை தடுத்த வனத்துறை ஊழியர் மீது
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே செவ்வாய்க்கிழமை இரவு மணல் கடத்தலில் ஈடுபட்டதை தடுத்த வனத்துறை ஊழியர் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றதாக இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பருத்தியூரை சேர்ந்த ராஜேந்திரன் (56), கீழக்கரை வனச்சரகத்தில் பெரியபட்டிணம் பகுதியில் வனத்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் திருப்புல்லாணி அருகே இந்திரா நகர் பகுதியில் வனத்துறையினருடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, வனத்துறைக்கு சொந்தமான இடத்திலிருந்து டிராக்டரில் மணல் கடத்தி சென்றவர்களை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். டிராக்டர் நிற்காமல் போனதால் அதை ராஜேந்திரன் விரட்டிப் பிடிக்க முற்பட்டார். அப்போது மணல் கடத்தியவர்கள் ராஜேந்திரனை டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றனராம். இச்சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன், திருப்புல்லாணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் சார்பு ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் உரிமையாளரான ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் தங்கையாநகரை சேர்ந்த முனியசாமி மற்றும் டிராக்டர் ஓட்டுநரான பெருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் ஆகிய இருவரையும் தேடி வருகிறார்.
சம்பவ இடத்தில் டிராக்டரை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டதால் டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.