FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

நலவாரியத்தில் உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

தொழிலாளர் நல வாரியத்துக்கு நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெற, அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 7 ஆகஸ்ட் 2018, 5:22 am IST
பகிர்:

தொழிலாளர் நல வாரியத்துக்கு நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெற, அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தொழிலாளர் நல உதவி ஆணையாளர் (அமலாக்கம்) க.விஸ்வநாதன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
புத்தகங்கள் வாங்க 11-ம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டம் வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடநூல் நிதியுதவி, பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், ஆசிரியர் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
 மேலும், தொழிற்பயிற்சி மற்றும் மேல்நிலைக் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. 10,12-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. 
இத்திட்டங்கள் தொழிலாளர் நல நிதி செலுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
 கூடுதல் விவரங்கள், விண்ணப்பங்களுக்கு செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718, தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரிக்கு சுயவிலாசமிட்ட, தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் தொடர்பு கொள்ளலாம். மேலும், தொழிலாளர் நல வாரியத்தை 044-2432 1542 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments