ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கல்யாணம்
திருவாடானை சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
திருவாடானை சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
ராமநாதபுரம்சம்ஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியபட்ட இக்கோயிலில் ஆடிப்பூரத்திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்றில் இருந்து ஒவ்வோர் நாளும் அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்சியான தேரோட்டம் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. மாலை மாற்றும் வைபவத்தைத் தொடர்ந்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக அம்மன் புஷ்ப பல்லக்கில் சயன அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மொய் எழுதும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.