FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில்  ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம்  புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில்  ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம்  புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
  கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தெற்கு நந்தவன திருக்கல்யாண திருமண மண்டபத்தில் புதன்கிழமை ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள்  திருக்கல்யாணம் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருமண நிகழ்ச்சிக்கு காணிக்கை அளித்தனர். அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் பாஸ்கரன் தலைமையில் திருமாங்கல்யம், பட்டுப்படவை, பூ, பழம் உள்ளிட்ட 16 வகையாக சீர் வரிசை  கொண்டு வந்திருந்தனர். திருக்கல்யாணத்திற்கு வந்த பக்தர்களுக்கு திருமாங்கல்ய மஞ்சல் கயிறு, குங்குமம் உள்ளிட்ட பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.  
  நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசி,தக்கர் குமரன்சேதுபதி,கோயில் கண்காணிப்பாளர் ககாரின்ராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், இளநிலை பொறியாளர் ராமமூர்த்தி,பேஸ்கார்கள் அண்ணாத்துரை,கலைச்செல்வம்,அண்ணா தொழில் சங்கப் பொருளாளர் ஜெய்கணேஷ், திருபனதாள் காசிமடம் இளவரசு சுவாமிகள், வேடராஜன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.  100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments