FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராமநாதபுரத்தில் "நம் சுவர், நம்மால் சிலர்' திட்டம் தொடக்கம்

ராமநாதபுரத்தில் உபயோகமற்ற பொருள்களை இலவசமாக வழங்கும் வகையிலான நம் சுவர், நம்மால் சிலர் திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

ராமநாதபுரத்தில் உபயோகமற்ற பொருள்களை இலவசமாக வழங்கும் வகையிலான நம் சுவர், நம்மால் சிலர் திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில்  அரசு தலைமை மருத்துவமனை  மருத்துவர் ஆர்.ஆனந்த் சார்பில் இத்திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தாத பொருள்களை இங்கு கொண்டு வந்து வைக்கலாம். அவற்றை தேவைப்படுவோர் இலவசமாக எடுத்துச் செல்லலாம். இத்திட்டத்தை ராமநாதபுரம் டி.எஸ்.பி. எஸ்.நடராஜன் ஏழைகளுக்கு இலவசமாக சட்டைகள்,சேலைகளை வழங்கி தொடக்கி வைத்தார். 
இது குறித்து மருத்துவர் ஆர்.ஆனந்த் கூறியது:  வீட்டில் மீதமாகிப்போன உணவுப் பொருள்கள்,குளிர் பானங்கள் உள்பட எதையும் இங்குள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு போய்விடலாம். அதை தேவைப்பட்டவர்கள் எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். தேவையில்லாமல் இருக்கும் துணிமணிகளையும் இங்கு வைக்கலாம். அதை வேண்டுபவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments