FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

திருச்சியில் இருந்து ராமேசுவரத்துக்கு 120 மாணவர்கள் 250 கி.மீ. விழிப்புணர்வு "ஸ்கேட்டிங்'

திருச்சியில் இருந்து 120 மாணவர்கள் தூய்மை இந்தியா, மரம் நடுதல் போன்றவற்றை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 7:50 am IST
பகிர்:

திருச்சியில் இருந்து 120 மாணவர்கள் தூய்மை இந்தியா, மரம் நடுதல் போன்றவற்றை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 250 கி.மீ. "ரோலர் ஸ்கேட்டிங்' செய்து ஞாயிற்றுகிழமை ராமேசுவரம் வருகை தந்தனர். 
திருச்சி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் அப்துல் கலாமின் விஷன் 2020, தூய்மை இந்தியா, மரங்கள் நடுவது போன்றவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 6 வயது முதல் 14 வயதிற்கு உட்பட்ட 120 "ரோலர் ஸ்கேட்டிங்' மாணவ, மாணவிகள் "ஸ்கேட்டிங்' மூலம் திருச்சியில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டனர். பின்னர் தேவகோட்டை, தேவிபட்டினம், ராமநாதபுரம் வழியாக சுமார் 250 கி. மீ. தூரத்தை   "ஸ்கேட்டிங்' மூலம் கடந்து ஞாயிற்றுகிழமை  மாலை  ராமேசுவரத்தில் உள்ள குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவிடம் வந்தடைந்தனர். 
இந்த பேரணியில் வழிநெடுகிலும் கலாமின் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். பின்னர் கலாமின் கனவுகளை நினைவாக்க பாடுபடுவோம் என அவரது நினைவிடத்தில் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
ராமநாதபுரத்தில் வரவேற்பு: முன்னதாக திருச்சி ரோல்பால் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் ராமநாதபுரம் வந்த இவர்களுக்கு ராமநாதபுரம் ரோல் பால் அசோசியேஷன் சங்கத்தின் தலைவர் ஆடிட்டர்.ஜெ.ரமேஷ்பாபு, செயலாளர் செந்தில், உறுப்பினர்கள் பாலசரவணன்,பிரகாஷ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். காகிதத்தால் செய்யப்பட்ட தேசியக் கொடியை மாணவர்கள் அனைவருக்கும் வழங்கியதுடன், அவர்களுக்கு குளிர் பானங்கள், பிஸ்கெட்கள் மற்றும் குடிநீர் உள்ளிட்டவைகளும் அளிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments