குழந்தை சடலத்தை பரிசோதனை செய்வதில் தாமதம்: அரசு மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
முதுகுளத்தூரில் வீட்டு கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்த குழந்தையின் சடலத்தை பிரதேப்பரிசோதனை செய்வதில் தாமதம்
முதுகுளத்தூரில் வீட்டு கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்த குழந்தையின் சடலத்தை பிரதேப்பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் வியாழக்கிழமை அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முதுகுளத்தூர் அருகே காமாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மனைவி பிரபா. முதுகுளத்தூர் திடல் தெருவில் வசித்து வருகின்றனர். இவர்களின் மகன் ரிஸ்வந்த் (4) புதன்கிழமை இரவு வீட்டில் உள்ள கழிப்பறைக்கு செல்லும்போது வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் அளித்த தகவலின்பேரில் போலீஸார் வந்து விசாரித்தனர். மேலும் பிரேதப் பரிசோதனை செய்த பிறகே சடலத்தை வழங்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் குழந்தையின் பெற்றோர்மற்றும் உறவினர்கள் சடலத்தை பெறுவதற்காக காத்திருந்தனர். இந் நிலையில் வியாழக்கிழமை காலை 11 மணி ஆகியும் பிரேதப் பரிசோதனை செய்யாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறை ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீஸார் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர்.அதன்பின் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் 30 நிமிடம் போக்குவரத்து நெரிசல் எற்பட்டது. குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.