பரமக்குடி அருகே கார் மோதி விவசாயி சாவு
பரமக்குடி அருகே வியாழக்கிழமை சாலையைக் கடக்க முயன்ற விவசாயி கார் மோதி உயிரிழந்தார்.
பரமக்குடி அருகே வியாழக்கிழமை சாலையைக் கடக்க முயன்ற விவசாயி கார் மோதி உயிரிழந்தார்.
பரமக்குடி அருகே உள்ள பிய்யனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் சாத்தையா (45). விவசாயத் தொழிலாளியான இவர் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க பரமக்குடி வருவதற்காக மதுரை-ராமேசுவரம் செல்லும் வெங்காளூர் விலக்கு சாலைக்கு சென்றுள்ளார்.
சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த கார் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த சாத்தையா பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் அவரது சகோதரர் முனியாண்டி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.