கமுதியில் மண்புழு உரம் தயாரிக்கும் திட்டம் செயல்பாடின்றி முடக்கம்
கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 53 ஊராட்சிகளில் அமைக்கபட்ட மண்புழு உரம் தயாரிக்கும் நிலையங்கள்
கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 53 ஊராட்சிகளில் அமைக்கபட்ட மண்புழு உரம் தயாரிக்கும் நிலையங்கள் செயல்பாடின்றி அரசு நிதி வீணடிக்கபட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கமுதி பகுதியில் மத்திய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ், ஊராட்சிகள் தோறும் 2016 ஆம் ஆண்டில், ரூ.1 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டது. கமுதி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 53 ஊராட்சிகளிலும் பெயரளவில் அமைக்கபட்டுள்ள மண்புழு உரம் தயாரிக்கும் நிலையம் செயல்பாடின்றி முடங்கியுள்ளது. மேலும் இத்திட்டம் தொடங்கிய நாள் முதலே ஒரு விவசாயிக்கு கூட மண்புழு உரம் தயாரித்து கொடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் அரசு நிதி ரூ. 53 லட்சம் வீணடிக்கபட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மண்புழு உரம் தயாரிப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.