FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தொண்டி அருகே சடலத்தை  கொண்டு செல்ல எதிர்ப்பு: அதிகாரிகள் சமரசம்

தொண்டி அருகே செவ்வாய்க்கிழமை இறந்தவரின் சடலத்தை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அதிகாரிகள் சமரசம் செய்து வைத்தனர். 

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

தொண்டி அருகே செவ்வாய்க்கிழமை இறந்தவரின் சடலத்தை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அதிகாரிகள் சமரசம் செய்து வைத்தனர். 
ராமாநாதபுரம் மாவட்டம்  தொண்டி அருகே எட்டுசேரி கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பன் (90). இவர் வயது முதிர்வு காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இவரது சடலத்தை அடக்கம் செய்ய இடுகாட்டுக்கு கொண்டு செல்லும் போது, தங்களது தெரு வழியாக வரக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. 
தகவலறிந்த திருவாடானை வட்டாட்சியர் சேகர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், தொண்டி ஆய்வாளர் பிரபு, சார்பு ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து சடலம், அதே பாதை வழியாக இடுகாட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக புதன்கிழமை இருதரப்பினர் பங்கேற்கும் சமரசக் கூட்டம் நடைபெறும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments