FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரேத பரிசோதனை தாமதத்தால் சாலை மறியல்

விபத்தில் காயமடைந்து உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

விபத்தில் காயமடைந்து உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி அப்பெண்ணின் உறவினர்கள் ராமநாதபுரத்தில் மறியலில் ஈடுபட்டதால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. 
கீழக்கரை அருகே உள்ள நத்தத்தைச் சேர்ந்தவர் முகமதுகனி. இவரது மனைவி ஹாஜிநிஷா (44). இவர் செவ்வாய்க்கிழமை மாலை மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். கீழக்கரையில் கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் அவர்கள் சென்றபோது பின்னால் வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. 
விபத்தில் காயமடைந்த ஹாஜிநிஷா ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. புதன்கிழமை பகல் வரை பிரேதப் பரிசோதனை நடைபெறவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஹாஜிநிஷாவின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தவகலறிந்த ராமநாதபுரம் நகர் போலீஸார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். பின்னர் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments