எஸ்.பி.பட்டிணம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் ஒருவர் கைது
திருவாடானை அருகே மணல் கடத்திய லாரியை புதன்கிழமை மாலை பறிமுதல் செய்ததுடன், அதன் ஓட்டுநரையும் போலீஸார் கைது செய்தனர்.
திருவாடானை அருகே மணல் கடத்திய லாரியை புதன்கிழமை மாலை பறிமுதல் செய்ததுடன், அதன் ஓட்டுநரையும் போலீஸார் கைது செய்தனர்.
எஸ்.பி.பட்டிணம் போலீஸார் புதன்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது கலியநரி விலக்கு சாலையில் சென்ற லாரியை மடக்கி சோதனையிட்ட போது அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸார், அதை ஓட்டி வந்த ஓட்டுநர் தஞ்சை மாவட்டம் மாப்பில் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் தமிழ் செல்வன் (35) என்பவரை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.