கமுதி குடியிருப்பு பகுதிகளில் மின் வயர்கள் சீரமைப்பு
கமுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர்.
கமுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர்.
கமுதி கண்ணார்பட்டி, எட்டுக்கண்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்கள், சாலையோரங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு சாலையின் குறுக்கே வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகள் மிகவும் தாழ்வாக செல்வதாகவும், மின் கம்பங்கள் சாய்ந்து விழும் அபாயத்தில் இருப்பதாகவும், அப்பகுதி பொதுமக்கள் கமுதி மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கமுதி மின்வாரிய ஊழியர்கள் தாழ்வாக செல்லும் மின் ஒயர்கள், சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.