சாயல்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டது.
சாயல்குடியில் கடலாடி வட்டாட்சியர் முத்துலெட்சுமி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், துணை வட்டாட்சியர் ரவி, காவல்துறை ஆய்வாளர் ஜோக்கிம் ஜெர்ரி ஆகியோர் முன்னிலையில் இ.சி.ஆர்.சாலையில் இருந்து கன்னியாகுமரி சாலை, அருப்புக்கோட்டை செல்லும் சாலை வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கையும் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.