ரூ.50 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை
முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது.
முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது.
முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்திற்கு தாலுகா செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாநிலக் செயற்குழு உறுப்பினர் சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் காசிநாதத்துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலையரசன், செந்தில்வேல், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், முதுகுளத்தூர், கடலாடி பகுதியில் தொடர் மணல் திருட்டை தடுக்க வேண்டும், விவசாயத் தொழிலாளி குடும்பத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், 2017-2018 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை முழு அளவில் வழங்க வேண்டும், கமுதியில் விவசாய நிலத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.