கமுதி அருகே 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஊருணியில் தேங்கிய கழிவுநீர் அகற்றம்
கமுதி அருகே 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஊருணியில் தேங்கிய கழிவுநீர் மோட்டார் மூலம் புதன்கிழமை அகற்றப்பட்டது.
கமுதி அருகே 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஊருணியில் தேங்கிய கழிவுநீர் மோட்டார் மூலம் புதன்கிழமை அகற்றப்பட்டது.
கமுதி அருகே வெள்ளையாபுரம், சிங்கபுலியாபட்டி ஆகிய கிராமங்களுக்கு இடையில் உள்ள ஊருணியில் கடந்த 10 ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதோடு, இரவு நேரங்களில் பொதுமக்கள் கொசுத்தொல்லையால் அவதிபட்டு, தொற்றுநோயால் பாதிக்கபட்டனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். பேரூராட்சி அதிகாரிகள் கழிவு நீரை சாலைக்கு மறுபக்கம் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பலனில்லை. இந்நிலையில், ஊருணியில் தேங்கிய கழிவுநீரை மோட்டார்கள் மூலம் அகற்றி, சாலையில் துளையிட்டு குழாய் மூலம் சாலைக்கு மறுபக்கம் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் வெளியேற்றும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, பதவி பொறுப்பேற்ற முதல் நாளிலேயே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இச்செயலுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.