FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பேரவையில்
பகிர்:

தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும் என அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேரவை விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் விஜய், விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் பாதிக்கப்படும் வகையில் அமையவிருந்த பரந்தூர் விமான நிலைய திட்டம் இந்த அரசால் கைவிடப்படும் என்று அறிவித்தார்.

அப்போது, இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும், பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் அவைத் தலைவருக்கு கோரிக்கை வைத்தனர்.

Advertisement

Advertisement

ஆனால், முதல்வர் விஜய், பேரவை விதி 110-ன் கீழ் இந்த அறிவிப்புகளை வெளியிட்டதால், அது குறித்து பேச திமுகவினருக்கு அனுமதி அளிக்க முடியாது என்று அவைத் தலைவர் கூறிவிட்டார்.

இதனை எதிர்த்து திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று அவையில் கோஷமிட்டனர். எனவே, அனைவரும் வெளியே சென்று கோஷமிடுங்கள் என அவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் கூறினார். இதனால், திமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்கள் அனுமதி கொடு, அனுமதி கொடு என கோஷம் எழுப்பியவாறு வெளியே சென்றனர்.

முன்னதாக, விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் வாழும் குடியிருப்புகள் அதிகம் பாதிக்கப்படும் இடத்தில் பரந்தூர் விமான நிலையம் அமையவிருந்ததால் அந்த நடவடிக்கை கைவிடப்படும், மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் விஜய் பேரவையில் அறிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments