FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

கமுதி அடுத்த பெருநாழி அருகே உள்ள அவத்தான்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகன் (45). விவசாயியான இவர், கடந்த செப்டம்பர் 1ஆம்

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

கமுதி அடுத்த பெருநாழி அருகே உள்ள அவத்தான்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகன் (45). விவசாயியான இவர், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியின் பின்புறம் கிராமத்தினர் சிலருடன் சேர்ந்து டிராக்டரில் வைக்கோல் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.      முருகன் டிராக்டர் மேலே ஏறி கயிறு கட்டும்போது, கயிறு அறுந்ததில் கீழே விழுந்துள்ளார். இதில் காயமடைந்த அவரை, உடனடியாக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முருகன், சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.      இது குறித்து முருகன் மனைவி முத்துலெட்சுமி அளித்த புகாரின்பேரில், பெருநாழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments