ராமநாதபுரத்தில் தமிழில் பெயர்ப் பலகை வைக்காத 25 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தமிழில் பெயர்ப் பலகை வைக்காத 25 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் தொழிலாளர் நல உதவி ஆணையர் க.மலர்விழி தெரிவித்துள்ளார்.
தமிழில் பெயர்ப் பலகை வைக்காத 25 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் தொழிலாளர் நல உதவி ஆணையர் க.மலர்விழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டம் 1947-இன்படி பெயர்ப் பலகை தமிழில் பிரதானமாகவும், முதன்மையாகவும் வைக்காத நிறுவனங்களில் அந்தந்தப் பகுதி தொழிலாளர் நல உதவி ஆய்வாளர்களால் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. இதன்படி பெயர்ப்பலகை தமிழில் வைக்காத 25 நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.