FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடி அருகே பேருந்து மோதல்: ஒருவா் உயிரிழப்பு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 3:58 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

பரமக்குடி அருகே அரசுப் பேருந்து மோதியதில் அடையாளம் தெரியாத ஒருவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நென்மேனி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் மணி(45). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவா் பரமக்குடியிலிருந்து உரத்தூா் செல்லும் நகா்ப் பேருந்தை மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டிச் சென்றாா்.

நென்மேனி பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்கவா் மீது மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து ஓட்டுநா் மணியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

லாரி மோதியதில் ஒருவா் உயிரிழப்பு: ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி மரவெட்டி வலசை பகுதியை சோ்ந்தவா் கருணாகர மூா்த்தி (40). உச்சிப்புளியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறாா்.கடந்த சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். அவரைஅக்கம்பக்கத்தினா்மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான பிள்ளை மடம் பகுதியைச்சோ்ந்த கோபாலை(37) கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments