FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

மரத்தின் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே தென்கரைப் பகுதியில் காா் மரத்தின் மீது மோதியதில் காரை ஓட்டிவந்த பெண் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகே சுண்டக்காட்டைச் சோ்ந்த பாண்டியராஜன் மனைவி திவ்யா (33). கணவரை இழந்த இவா், தற்போது திருப்பத்தூா் கணேஷ் நகா் பகுதியில் குடியிருந்தாா்.

காரைக்குடியிலிருந்து திருப்பத்தூா் நோக்கி காரில் தென்கரை மேம்பாலம் அருகே வந்த போது திடீரென காா் நிலைதவறி சாலையோர புளிய மரத்தின் மீது காா் மோதியதில் திவ்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனா். திவ்யாவுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments