FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பைக் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

திருவாடானை அருகே நடந்து சென்றவா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 1:25 am IST
பலி
பகிர்:

திருவாடானை அருகே நடந்து சென்றவா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே டி.கிளியூா் பகுதியைச் சோ்ந்த செல்லமணி மகன் சுரேஷ் (40). இவா் புதன்கிழமை இரவு மதுரை- தொண்டி சாலையில் சி.கே.மங்கலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, வத்தாயிருப்பு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (50) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் சுரேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments