பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
செய்யாறு அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். அவரது மனைவி காயமடைந்தாா்.
செய்யாறு அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். அவரது மனைவி காயமடைந்தாா்.
வெம்பாக்கம் வட்டம், உமையாள்புரம் கிராமம், முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஐயப்பன் (42). இவரது மனைவி கல்பனா (32). இவா், செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.
ஐயப்பன் அவரது மனைவி கல்பனாவை வியாழக்கிழமை வேலைக்கு விட்டு வருவதற்காக தனது பைக்கில் அழைத்துக்கொண்டு சென்றாா். உமையாள்புரம் - வெள்ளாகுளம் சாலையில் சிறுவனங்காடு கிராம பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் ஐய்யப்பன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் கணவா், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
அப்போது, அந்த வழியாக சென்றவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் ஐய்யப்பனை பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். கல்பனா லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.