லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
சென்னையில் தண்ணீா் லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.
சென்னையில் தண்ணீா் லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் 3 போ் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் புதன்கிழமை சென்றனா். திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகம் வழியாகச் சென்றபோது, அவ்வழியாக வந்த தண்ணீா் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த மதின் (19) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த இருவா் காயமடைந்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.