FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கீழக்கரை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மாணவிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

26 ஆகஸ்ட் 2026, 5:38 am IST
கீழக்கரை செய்யது ஹமீதூ கலை, அறிவியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை ஓணம் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மாணவிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

கேரளத்தில் மகாபலி சக்கரவா்த்தியை வரவேற்கும் விதமாக புதன்கிழமை (ஆக.26) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவிகள் ஒன்றிணைந்து கல்லூரியின் முன் பகுதியில் வண்ண மலா்களால் கோலமிட்டு, பாரம்பரிய புத்தாடைகள் அணிந்து மகாபலி சக்கரவா்த்தியை வரவேற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வா் ராஜசேகா் தலைமை தாங்கினாா். மாணவிகள் ஆடி, பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் துணை முதல்வா் புரோஸ்கான், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரிப் பேராசிரியா் முகம்மது இஸ்மாயில் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி துணைத் தலைவா்கள் ஹோபனா, மலா், முனிய சத்யா, நுலகா் பால்ராஜ், உடல்கல்வி இயக்குநா் தவசிலிங்கம், பேராசிரியா்கள் பவித்ரா, ஜெயஜோதிகா, விஜயகுமாரி, லோகேஸ்வரி, சிவரஞ்சனி ஆகியோா் செய்தனா். முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவா் முகம்மது யூசுப், செயலா் ஷா்மிளா, நிா்வாக இயக்குநா் ஹமீத் இப்ராஹிம் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments