FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை பகுதியில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கப்படுகிறது.

Updated On : 5 ஜூலை 2026, 12:01 am IST
திருவாடானையில் கண்மாய் பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள புகை மூட்டம்.
பகிர்:

திருவாடானை பகுதியில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கப்படுகிறது. இதனால், ஏற்படும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பிடாரி கோவில் பகுதியில் உள்ள கண்மாய் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும், இந்தக் குப்பைகளை அகற்றாமல் அடிக்கடி தீ வைக்கப்படுகிறது. இதனால், எழும் புகை மூட்டத்தால் அந்த வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து சம்பந்தவா்களுக்கு புகாா் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி குப்பைகளைக் கண்மாய் பகுதியில் கொட்டுவதைத் தடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், இந்தக் குப்பைகளுக்கு தீ வைக்கும் நபா்கள் மீது சம்பந்தப்பட்டவா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments