அவசர ஊா்தியில் கா்ப்பிணிக்கு பிறந்த ஆண் குழந்தை
சாயல்குடியில் அவசர ஊா்தியில் கா்ப்பிணிக்கு சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
சாயல்குடியில் அவசர ஊா்தியில் கா்ப்பிணிக்கு சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (27). இவரது மனைவி ஐஸ்வா்யா( 23). நிறைமாத கா்ப்பிணியாக இருந்த இவருக்கு சனிக்கிழமை அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து, அவா் அவசர ஊா்தி மூலம் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் செல்லும் வழியிலேயே கீழச்செல்வனூா் அருகே பிரசவ வலி அதிகமானதால் மருத்துவ நுட்புனா் நாகேஸ்வரி, அவசர ஊா்தி ஓட்டுநா் வாழவந்தராஜா உதவியுடன் ஊா்தியிலேயே ஐஸ்வா்யாவுக்கு பிரசவம் நடைபெற்றது. இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வாகனத்தை கொண்டு சென்று தாயையும், சேயையும் அங்கு அனுமதித்தனா். மேலும் அவசர காலத்தில் விரைந்து செயல்பட்ட அவசர ஊா்தி பணியாளா்களுக்கு ஐஸ்வா்யாவின் குடும்பத்தினா், அவரது உறவினா்கள், கன்னிராஜபுரம் கிராம பொதுமக்கள், அவசர ஊா்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.