கமுதி புனித அந்தோணியாா் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
கமுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் தேவாலய திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கமுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் தேவாலய திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு புனித அந்தோணியாா் உருவம் பொறித்த கொடி பவனியாக தேவாலயத்தைச் சுற்றி மேளதாளம், வாண வேடிக்கைகளுடன் கொண்டு வரப்பட்டது. பிறகு கொடி மரத்தில் கமுதி பங்குத்தந்தை அம்புரோஸ் லூயிஸ் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தாா். அருள்பணியாளா் சிரில் (தில்லியில் உள்ள இந்திய சமூக நிறுவன இயக்குநா்) திருப்பலி நிறைவேற்றினாா். இந்த கொடியேற்று விழாவில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். வருகிற 12-ஆம் தேதி புனித அந்தோணியாா், புனித சவேரியாா், புனித செபஸ்தியாா், புனித மைக்கேல் அதிதூதா் சொரூபங்கள் அலங்கரிக்கப்பட்ட தோ்களில் கமுதி முக்கிய வீதிகள் வழியாக பவனியாக கொண்டு வரப்படுகின்றன. மறுநாள் 13-ஆம் தேதி அந்தோணியாா் தெரு, சவேரியாா் தெரு பகுதிகளில் தோ்ப் பவனி நடைபெறும். 14-ஆம் தேதி கா்த்தநாதசுவாமி நினைவு அசன வைபவம் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பரத உறவின் முறையினா் செய்து வருகின்றனா்.