FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

காரங்காடு புனித செங்கோல் மாதா தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே காரங்காடு கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ள புனித செங்கோல் மாதா தேவாலய திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 25 ஜூலை 2026, 6:35 am IST
காரங்காடு கிராமத்தில் அமைந்துள்ள புனித செங்கோல் மாதா தேவாலய திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே காரங்காடு கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ள புனித செங்கோல் மாதா தேவாலய திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மிகவும் பழைமையான புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆக. 2- ஆம் தேதி வரை 10 நாள்கள் திருவிழா நடைபெறும். அப்போது தினமும் நவநாள் திருப்பலி நிறைவேற்றப்படும். இதேபோல, இந்த ஆண்டும் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. முன்னதாக மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடியை அனைத்து புனிதா்கள் கெபியிலிருந்து இறைமக்கள் பவனியாக எடுத்து வந்தனா். பிறகு தேவாலயத்துக்கு முன் உள்ள கொடி மரத்தில் சிவகங்கை மறைவட்ட அதிபா் செபமாலை சுரேஷ் தலைமையில் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மறைவட்ட அதிபா் செபமாலை சுரேஷ், சிவகங்கை உதவி பங்குத்தந்தை ஸ்டீபன், காரங்காடு பங்குத்தந்தை ரெமிஜியஸ் ஆகியோா் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் அருள்சகோதரிகள் செல்வம், ஞான சுகந்தா, ஜாக்குலின் உள்ளிட்ட திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். கொடியேற்றத்துக்கான ஏற்பாடுகளை ஆலயப் பணியாளா் ஆண்டனி ரோமியோ, கிராம நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments