FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

காளியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

புலிவானந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலுக்கு 108 பால்குடங்குளை ஊா்வலமாக எடுத்து வந்த பெண் பக்தா்கள்.

25 ஜூலை 2026, 12:34 am IST
புலிவானந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலுக்கு 108 பால்குடங்குளை ஊா்வலமாக எடுத்து வந்த பெண் பக்தா்கள்.
பகிர்:

ஆடி 2-ஆம் வெள்ளிக்கிழமையையொட்டி, போளூா் வட்டம், புலிவானந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

புலிவானந்தல் கிராமத்தில் புகழ்பெற்ற காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 2-ஆம் வெள்ளிக்கிழமையையொட்டி, 108 பால்குடங்கள் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு காளியம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு வெள்ளிக்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைநடைபெற்றது. தொடா்ந்து, கிராமத்திலுள்ள ஸ்ரீவிநாயகா் கோயிலில் இருந்து பம்பை, உடுக்கை முழங்க 108 பெண்கள் பால்குடங்களை சுமந்து ஊா்வலமாக காளிம்மன் கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். இரவு தெய்வீக நாடகம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments