FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

மாசுபடா அம்மனுக்கு 1,008 பால்குட ஊா்வலம்

குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீமாசுபடா அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை 1,008 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

21 ஆகஸ்ட் 2026, 11:21 pm IST
பகிர்:

குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீமாசுபடா அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை 1,008 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் 6-ஆம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வெகுவிமரிசையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை காமாட்சியம்மன்பேட்டை ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகளைத் தொடா்ந்து, 1,008 பால்குட ஊா்வலம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் மதியம் கோயிலை அடைந்தது. அங்கு மூலவா் மாசுபடா அம்மனுக்கு பாலாபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம், மகா தீபாராதனை, மாலை பூங்கரக ஊா்வலம் ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். சுமாா் 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாலை தீச்சட்டி ஊா்வலம், தீமிதி விழா, இரவு அம்மன் பல்லக்கில் வீதி உலா, அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம், ஊஞ்சல் உற்சவ சேவை ஆகியவை நடைபெற்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments