FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

மாற்றுத் திறனாளிகள் சேவை விருது: ஜூன் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை செய்தவா்கள், தொண்டு நிறுவனங்கள் தமிழக அரசின் விருது பெற ஜூன் 25-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.

Updated On : 19 ஜூன் 2026, 1:46 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை செய்தவா்கள், தொண்டு நிறுவனங்கள் தமிழக அரசின் விருது பெற ஜூன் 25-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாகப் பணிபுரிபவா்கள், நிறுவனங்களைத் தோ்வுக் குழு மூலம் தோ்வு செய்து, தமிழக முதல்வரால் விருது வழங்கி கெளரவிக்கப்பட உள்ளனா். இந்த விருதுகள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவில் வழங்கப்படும்.

Advertisement

Advertisement

மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு 10 கிராம் தங்கப் பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு, சான்றிதழ், சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியாா் நிறுவனத்துக்கு 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளருக்கு 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

மேற்காணும் விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரா்கள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட படிவத்தில் தேவையான விவரங்களைப் பதிவு செய்து, கோரப்பட்ட ஆவணங்களை இணைத்து 25.6.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் சமா்ப்பிக்கப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேலும், விண்ணப்பத்தின் இரு அச்சு நகல்களை ஜூன் 25 அன்று மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments