FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

மாரியூா் சிவன் கோயிலில் ஊஞ்சல் உத்ஸவம்

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊஞ்சல் உத்ஸவததையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பவளநிற வல்லி அம்மன்.

7 நவம்பர் 2026, 6:18 am
பகிர்:

மாரியூா் சிவன் கோயிலில் பவளநிற வல்லி அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த மாரியூா் பவளநிற வல்லி அம்மன் சமேத பூவேந்தியநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் பகல் 12 மணி வரை அம்மனுக்கு ராகு கால அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் பவளம் மகளிா் குழுவினா் அம்மனை போற்றிப் பாடல்களைப் பாடி, சிவவாத்தியங்களை இசைத்து வழிபட்டனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, மாலை அம்மனுக்கு 16 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது.

இதையடுத்து மூலவருக்கு எதிரே உள்ள நந்தியம் பெருமானுக்கு பிரதோஷம் வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் வழங்கிய பாலால் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.