மாரியூா் சிவன் கோயிலில் ஊஞ்சல் உத்ஸவம்
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த மாரியூா் சிவன் கோயிலில் பவளநிற வல்லி அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த மாரியூா் சிவன் கோயிலில் பவளநிற வல்லி அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாரியூா் பவளநிற வல்லி அம்மன் சமேத பூவேந்திய நாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை அம்மனுக்கு ராகு கால அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, மாலை அம்மனுக்கு 16 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.