ஒரு மாதமாக மின் விநியோகம் துண்டிப்பு: மின்வாரிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
மானாமதுரை அருகே மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மின்வாரிய அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
மானாமதுரை அருகே மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மின்வாரிய அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
மானாமதுரை அருகே கீழப்பிடாவூர் ஊராட்சிக்குள்பட்ட கீழமாயாளி கிராமத்துக்கு மின் விநியோகம் வழங்கும் மின் மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமத்துக்கு கடந்த ஒரு மாதமாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாம். இதனால் இரவு நேரங்களில் கிராமமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது. மேலும் மின்சாரம் இல்லாததால் குடிதண்ணீர் மோட்டார் இயங்காதநிலையில் பொதுமக்கள் 2 கி.மீ தூரம் நடந்து சென்று கே.பெருங்கரை கிராமத்தில் குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறப்றப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு மானாமதுரையில் உள்ள ஊரக மின்வாரிய அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மின்வாரிய பொறியாளர் அழகப்பன் மின்மாற்றி சரி செய்யப்பட்டு மின்விநியோகம் சீரமைக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.