FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அழகப்பா பல்கலை. தொலை நிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்விக்கான தேர்வு முடிவுகள் w‌w‌w.a‌l​a‌g​a‌p‌p​a‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y.ac.‌i‌n​  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்விக்கான தேர்வு முடிவுகள் w‌w‌w.a‌l​a‌g​a‌p‌p​a‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y.ac.‌i‌n​  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

 பி.லிட்., பி.ஏ., ஆங்கிலம், பி.ஏ., ஆங்கிலம் அடிஷனல் டிகிரி, பி.ஏ., பப்ளிக் அட் மினிஸ்ட்ரேஷன், பி.எஸ்சி., ஐ.டி, இதில் நேரடி 2ஆம் ஆண்டு, பி.சி.ஏ. மற்றும் பி.சி.ஏ நேரடி 2ஆம் ஆண்டு பாடப்பரிவுகளுக்கும், எம்.பி.ஏ. படிப்பில் பினான்சியல் மேனேஜ்மென்ட், புரடெக்ஷன் அண்டு ஆபரேஷன்மேனேஜ்மென்ட், சிஸ்டம் மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், கார்ப்பரேட் செகரட்டரிஷிப், இண்டர் நேஷனல் பிசினஸ், புராஜக்ட் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட், பேங்கிங் அண்டு பைனான்ஸ், எஜூகேசன் மேனேஜ்மென்ட் பாடப் பிரிவுகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 அதே போல், எம்.காம்., எம்.எஸ்டபிள்யூ, எம்.ஏ. ஆங்கிலம், சோசியாலஜி, சைல்ட் கேர் அன்ட் எஜூகேஷன், எம்.ஜே.எம்.சி., எம்.சி.ஏ, இதில் நேரடி 2ஆம் ஆண்டு, எம்.எஸ்சி., ஐடி எம்.எஸ்சி., சாப்ட்வேர் என்ஜினீயரிங் பாடப் பிரிவுகளுக்கும், எம்.ஃபில் பிரிவில் உயிரியல், பிஜி டிப்ளமோ பிரிவில் யோகா எஜூகேசன், ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேசன், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், பி.ஜி.டி.சி.ஏ, பி.ஜி.டி. லைப்ரரி ஆட்டோமேஷன் அன்ட் நெட்வொர்க்கிங் பாடப் பிரிவுகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

 தேர்வு முடிவு வெளியான 10 தினங்களுக்குள் அதாவது 14.3.2016 ஆம் தேதிக்குள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை அழகப்பா பல்கலைக் கழக இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் மறுமதிப்பீட்டுக் கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ.500 வீதம் பதிவாளர், அழகப்பா பல்கலைக் கழகம் என்ற பெயரில் காரைக்குடியில் செல்லத்தக்கதாக வரைவோலை எடுத்து விண்ணப்பிக்க வேண்டும் என பல்கலைக் கழகத் தேர்வாணையர் ஆ.குருமல்லேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments